School Chalo 2012

Jan 30: தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம்

Wednesday, February 1st, 2012

Anti Terror Campaign

தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம்

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக தேச தந்தை 'மகாத்மா காந்தி' அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினத்தில் 'ஷஹித் பழனிபாபா அரங்கத்தில்' தக்வா பள்ளி அருகில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது . 
இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர தலைவர் சகோ.ப.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமைதாங்கி தலைமையுரையாற்றினார் .
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர செயலாளர் சகோ.A.T. அப்துல்லாஹ் B.com ,D.C.P , அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் மேலும்
சிறப்பு விருந்தினராக வருகை தந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோ.A .பக்ருதீன் அவர்களும் ,ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயலாளர் சகோ.முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்களும் SDPI யின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்களும் இந்தியாவில் தீவிரவாதம் யாரால் உருவாகிறது என்பதை பற்றி மிக சிறப்பான முறையில் உரையாற்றினார்கள் .இதில் 300 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

 


Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India