விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் புரட்சி வெடிக்கும்
அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று(21.11.11) கடையநல்லூர் காயிதேமில்லத் திடலில் வைத்து
மாலை 5 மணியளவில் SDPI சார்பாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது . வரவேற்புரை நகர தலைவர் நைனா முஹம்மத் கனி நிகழ்த்தினார்.
தலைமை உரையில் மாவட்ட தலைவர் K . திவான் ஒலி இந்த ஆட்சி ஹிட்லரின் மறுபதிப்பாக இருக்கிறது . குழந்தைகளின் ஜீவா நாடியாக இருக்கும் பால் விலையை அதிகரித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. பத்திரிகைகள் ஊடகங்கள் சொல்வது போல இந்த அரசிற்கு தமிழ் மக்களின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் அத்தியாவசிய தேவையான பெரும்பாலான மக்களை பாதிக்கக்கூடிய பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதே போல பேருந்து கட்டண உயர்வையும் ரத்து செய்ய வேண்டும் . டாட்டா பிர்லா போன்ற பணக்காரர்கள் பேருந்துகளில் பயணம் செல்வதில்லை. ஏழை எளிய நடுத்தர மக்கள் தான் பயணம் செய்கின்றனர். எனவே வெகுஜன மக்களை பாதிக்கும் விலை வாசி உயர்வை திரும்ப பெறாவிட்டால் மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெரும் என்பதை சுட்டிக்காட்டினார்.
நன்றிஉரை நகர செயலாளர் ரஹ்மதுல்லா ஆலிம் நிகழ்த்தினார்.
A neo social movement for a new India of equal rights to all Indians

















































