கேரளாவில் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் உற்சாகத்துடன் தொடங்கியது
Monday, February 13th, 2012

Karamana Ashraf Moulavi inaugurates public conference which was organised by Popular Frotn as part of public health campaign at Palakkadu
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடக்க விழா நிகழ்ச்சியின்போது பேசிய கேரளா மாநில தலைவர் கரமண அஷ்ரப் மௌலவி அவர்கள் ஆரோக்கியமான மக்கள் நாட்டின் சொத்துக்கள் என்பதை நினைவு படுத்தினார் . ஆரோக்கியம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் கவனக்குறைவுடன் பலர் இருப்பதை சுட்டிக்காட்டினார். நோய்வாய்ப்பட்ட சூழல் நாட்டின் சமூக கட்டமைப்பை சீர்கெடுக்கும் ஆபத்தான பிரச்னை. நவீன மருத்துவமனை நாட்டில் பெருகிவருவது நாட்டின் வளர்ச்சியை குறிக்காது. உணவு பழக்கவழக்க மற்றும் வாழ்க்கை முறை சீர்கேட்டால் ஏற்படும் நோய்கள் நாட்டை அச்சுறுத்துகின்றன. உடற்பயிற்சி இன்மையும் பாஸ்ட் பூட் உணவு கலாச்சாரமும் இத்தகைய பிரச்சினைகளுக்கு மூல காரணங்கள் . இரத்த கொதிப்பாக இருந்தாலும் சரி அல்லது நெஞ்சு வலி , சர்க்கரை வியாதி போன்ற அனைத்து வகை நோய்களுக்கும் தவறான உணவு பழக்க வழக்கமே பெரும்பாலும் வில்லனாக அமைந்து விடுகிறது . எனவேதான் சமூகத்தை அச்சுறுத்தும் பிரச்சனைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தட்ட சுகாதார விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை பாப்புலர் பிரான்ட் ஆப இந்திய மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார்

National football player Abdul Hakeem inaugurates marathon organised by Popular Frotn as part of public health campaign at Palakkadu
அப்துஸ் சமத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த டாக்டர் அஷ்ரப், அப்துல் ரஹ்மான் பாகவி, ஹுசைன், கால்பந்தாட்ட வீரர் அப்துல் ஹகீம், நஜீப், பாலக்காட்டு sdpi மாவட்ட தலைவர் காஜா ஹுசைன், பாப்புலர் பிரண்ட் ஆப இந்தியாவின் மாவட்ட தலைவர் அப்துல் ஜலீல், திருச்சூர் மாவட்ட தலைவர் பாரூக் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியுள்ளனர்
பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒரு நாள் அடையாள சுத்தம் செய்யும் நிகழ்ச்சி யோகா வகுப்புகள் அனைத்து மட்டங்களிலும் நடைபெறும். பிரசாரத்தின் நிறைவு நாளன்று பிப்ரவரி 19 அன்று மாநிலம் முழுவதும் பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
A neo social movement for a new India of equal rights to all Indians

















































